12 Aug 2022 3:58 PM GMT
#7951
பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்
கொள்ளிடம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறைமாவட்டம் கொள்ளிடம் பகுதிக்கு ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பஸ்சில் வந்து செல்கின்றனர். இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை காணும் பொதுமக்கள், பெற்றோர்கள் மிகுந்த அச்சம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?