- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் பயணிகள் அவதி
திருச்சி மாவட்டம் துறையூர் பஸ் நிலையத்திலிருந்து காலை 7.15 மணிக்கு திருச்சி வழியாக மதுரைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நீண்ட காலமாக இந்த பஸ் எக்ஸ்பிரஸ் பஸ்சாக துறையூரிலிருந்து காளிப்பட்டி, பகளவாடி, கரட்டாம்பட்டி, புலிவலம், பெரமங்கலம், திருவெள்ளரை, மண்ணச்சநல்லூர், நொச்சியம், டோல்கேட், திருவானைக்காவல், சத்திரம் பஸ் நிலையம், கோர்ட், கலெக்டர் அலுவலகம் வழியாக திருச்சி மத்திய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து மதுரை இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த துறையூர் மதுரை செல்லும் அரசு பஸ் காலையில் இயக்கப்படும் அதே வழித்தட நேரத்தில் துறையூரில் இருந்து ஒன் டூ ஒன் பஸ்சாக திருச்சி செல்கிறது. இதனால் இந்த வழித்தடத்தில் உள்ள ஊர்களில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம் செல்லும் பயணிகள் மேற்கண்ட இடங்களுக்கு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.