- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர் பலகை வைக்கப்படாத அரசு பஸ்
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மண்ணச்சநல்லூர், திருவெள்ளரை, ஓமாந்தூர் வழியாக புத்தனாம்பட்டிக்கு அரசு நகரப் பஸ் மலைக்கோட்டை பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பஸ் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபினிமங்கலம் கிராமத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் பெயர்பலகையில் புத்தனாம்பட்டி மற்றும் அதன் மேல் அபினிமங்கலம் என்ற வார்த்தை போடப்பட்டு இயக்கப்பட்டு வந்ததால் வெளியூர் பயணிகள் சிரமமில்லாமல் பயணம் செய்து வந்தனர். தற்போது இயக்கப்படும் பஸ்சில் புத்தனாம்பட்டி பெயர் பலகையை எடுத்து விட்டு அபினிமங்கலம் என்ற ஊர் பெயரினை வைத்து இயக்குவதால் வெளியூர்களில் இருந்து வரும் பஸ் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். மேலும் புத்தனாம்பட்டியில் மட்டுமே அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் உள்பட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.