- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்தை தடுக்க வேண்டும்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை சேலம்-கரூர், கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது. சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கொடுமுடி, ஈரோடு, கோவை, பல்லடம், வெள்ளகோவில், க.பரமத்தி, அரவக்குறிச்சி, ராஜபுரம் போன்ற பகுதிகளுக்கு சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாலத்துறை வழியாக தனியார், அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் என அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. மேலும் பாலம் அமைக்கும் பணி முடிக்கப்பட்ட நிலையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாலத்துறை பகுதிக்கு செல்ல முடியாதபடி நெடுகிலும் இரும்பு தடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொடுமுடி பகுதிக்கு செல்லும் அனைத்து அரசு, தனியார் பஸ்களும், லாரிகளும், கார்களும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள்ள மேம்பாலம் வழியாக வேலாயுதம்பாளையம் சென்று கொடுமுடி பகுதிக்கு செல்கிறது. இதனால் பாலத்துறைக்கு எதிரே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை சாலையில் பஸ்களில் வரும் பயணிகள் சர்வீஸ் சாலை அருகே இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடந்து பாலத்துறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதேபோல் பாலத்துறையில் இருந்து வேலாயுதம்பாளையம் வரை உள்ள பொதுமக்கள் கொடுமுடி, ஈரோடு, கோவை பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வராததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பாலத்துறை எதிரே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடந்து வரும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே பாலத்துறை வழியாக கொடுமுடி பகுதிக்கு அனைத்து பஸ்களும் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.