23 July 2022 2:30 PM GMT
#3477
சரியான நேரத்துக்கு வராத பஸ்
திருவள்ளூர்
தெரிவித்தவர்: J selvi
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து செங்குன்றம் வரை செல்லும் (தடம் எண்- 62) பஸ் காலை மற்றும் மாலை நேரங்களில் சரியாக இயக்கப்படுவதில்லை. மேலும் 1 மணி நேரம் பஸ் வருவதே இல்லை, அதன் பின்பு வரும் பஸ் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து இதற்கொரு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.