26 April 2023 1:46 PM GMT
#31587
உடைந்து கிடக்கும் நாற்காலிகள்
தரங்கம்பாடி
தெரிவித்தவர்: பயணிகள்
கரூர் மாவட்டம், தரங்கம்பாடி பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் பயணிகள் பஸ் வரும் வரை அமர்வதற்கு நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாற்காலிகள் தற்போது உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வயதானவர்கள், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.