- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அதிக பாரத்துடன் செல்லும் டிப்பர் லாரிகள்
அரியலூர் மாவட்டத்தில் 9 சிமெண்டு ஆலைகள் மற்றும் 73 அரசு மற்றும் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. சுண்ணாம்பு கற்களை பல்வேறு கிராமங்களிலுள்ள சுரங்கத்திலிருந்து 24 மணி நேரமும் டிப்பர் லாரிகள் மூலம் தார்பாய் போடாமல் அரியலூரிலுள்ள சிமெண்டு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதிக பாரத்துடன் சாலையில் உள்ள வேகத்தடையில் வேகத்தை குறைக்காமல் செல்வதால் அடிக்கடி லாரிகளிலிருந்து சுண்ணாம்புக்கல் சிதறி சாலையில் விழுகிறது. இதனால் சாலை வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், 108 ஆம்புலன்ஸ் வாகனம் என அனைத்து வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சிமெண்டு ஆலைகளுக்கு நெய்வேலியிலிருந்து கனரக லாரிகள் மூலம் நிலக்கரி ஏற்றி வரும்போது சாலையில் சிதறி விழுகிறது. அதிக பாரத்துடன் நிலக்கரி லாரிகள், சுண்ணாம்புக்கல் லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதால் சாலைகள் சேதம் அடைந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.