2 April 2023 12:45 PM GMT
#30078
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா திருகொள்ளிக்காட்டில் பிரசித்திப்பெற்ற பொங்குசனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றன. ஆனால் பக்தர்கள் வந்து செல்வதற்கு முறையான பஸ் வசதி இல்லை. இதனால் கோவிலுக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து பொங்குசனீஸ்வரர் கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?