- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
லாரிகளால் விபத்து
அரியலூர்-ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ளது வி.கைகாட்டி. இந்த ஊர் வழியாக தினமும் அனைத்து சிமெண்டு ஆலைகளுக்கும் எண்ணற்ற கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் சாலையில் மண்ணுழி கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலைக்கு தென்புறத்தில் ஆபத்தான வளைவு பகுதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு முன்பாக அதிகளவில் தனியார் பள்ளிகளின் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களான பல்கர் லாரிகள், சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகள் ஆகியவைகளை நீண்ட நேரமாக நிறுத்தி விடுகிறார்கள். தினமும் அரியலூருக்கு கூலி வேலைக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டுவிட்டு தெற்கிலிருந்து வடக்கு புறம் நோக்கி சாலையில் திரும்பும்போது தென்புறக் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் மற்ற வாகனங்கள் மின்னல் வேகத்தில் வந்து இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது. இந்த விபத்துகளுக்கு முழு காரணம் அங்கு நிறுத்தி வைக்கப்படும் கனரக வாகனங்களே காரணம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு இரவில் இப்பகுதியில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்துள்ளார். மேலும் இந்தப் பகுதி அடிக்கடி விபத்துக்கள் நிகழும் பகுதியாகவும் மேலும் இங்கு எவ்வித வேகத்தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.