- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்திற்கு இடையூறு
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியிலிருந்து தெற்கே பெரிய திருக்கோணம் செல்லும் முதன்மை சாலையில் சேலத்தார் காடு, மு.புத்தூர், மங்கட்டான் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த சாலையின் வழியாக தினமும் பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தின் மூலம் அரியலூருக்கு கூலி வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வீட்டிற்கு வருகின்றனர். மேலும் இவ்வழியே 3 டவுன் பஸ்கள், ஒரு மினி பஸ் சென்று வருகிறது. இந்த கிராமங்களில் உள்ள குறுகிய சாலையின் இரு புறமும் ஆங்காங்கே குறிப்பாக முனியங்குறிச்சி செல்லும் பிரிவு சாலை முதல் மு.புத்தூர் வரை செடி- கொடிகள் மற்றும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும் இவ்வழியே புத்தூர் சுரங்கத்திற்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகள் மின்னல் வேகத்தில் செல்லும் லாரிகளுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் வழிவிட்டு ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் நிகழ்கிறது. மேலும் சில சமயங்களில் ஒரே நேரத்தில் லாரிகள் மற்றும் பஸ்கள் வரும் போது ஒதுங்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இவ்வழியே வேகமாக செல்லும் லாரிகளிலிருந்து கீழே விழும் சுண்ணாம்புக் கற்களை அகற்றாததால் இந்த மண்கள் தேங்கி சாலையிலிலுள்ள வெள்ளை நிற பட்டைகளை மறைத்து மேடாக உள்ளது. மேலும் அங்குள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை நிற பட்டைகள் இல்லை. சாலையும் வேகதடையும் ஒரே மாதிரி இருப்பதால் இவ்வழியே வெளியூரிலிருந்து இரு சக்கர வாகனம் மூலம் வரும் நபர்கள் வேகத்தடை இருப்பதை கண்டறிய முடியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இந்த நிலைபாடு தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.