16 July 2022 1:19 PM GMT
#2055
பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
ஆழ்வார்திருநகரி
தெரிவித்தவர்: சார்லஸ்
நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூருக்கு காலை 7.10 மணிக்கு அரசு பஸ் சென்று வந்தது. ஆனால், இந்த பஸ் கடந்த சில மாதங்களாக திடீரென்று நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த பஸ்சை நம்பி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என பலரும் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே, இந்த பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?