20 Oct 2024 1:31 PM GMT
#50721
சாலையின் நடுவில் பள்ளம்
ஆதம்பாக்கம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை ஆதம்பாக்கம், பழனி அம்மன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையின் நடுவில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. சாலையில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் அடிக்கடி கீழே விழுகின்றனர். மழை காலம் என்பதால் அதிக விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.