17 March 2024 5:25 PM GMT
#45325
சேதமடைந்த சாலை
விழுப்புரம்
தெரிவித்தவர்: தீனதயாளன்
பிரம்மதேசம் அருகே நகர் கிராமத்தில் இருந்து ராயநல்லூர் வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.