4 Feb 2024 12:36 PM GMT
#44135
நடுரோட்டில் குழி
கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் பிரதான சாலையில் சின்னவேடம்பட்டி பிரிவு அருகில் குழி ஒன்று உள்ளது. இந்த குழி இருப்பது பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. இதனால் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதுவும், இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே நடுரோட்டில் உள்ள அந்த குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.