17 Sep 2023 2:23 PM GMT
#40024
சாலையில் ஓடும் கழிவு நீர்
தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சாவூர் 16-வது வார்டிலுள்ள வடக்கு ஆஜாரத்தில் செண்பகவல்லியம்மாள் தெருவில் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதனை சரிசெய்ய வேலைகள் பார்த்தநிலையில் அப்பணி பூர்த்தி செய்யப்படாமல் பாதியிலேயே சென்றுவிட்டனர். இதனால் கழிவுநீர் வழிந்தோடி சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது டெங்கு போன்ற நோய்கள் பரவி வரும் இந்நிலையில் இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை