28 May 2023 2:31 PM GMT
#33422
பள்ளம் சீரமைக்கப்படுமா?
தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி அருகில் முத்துப்பேட்டை சாலையும் நாடியம்பாள்புரம் கல்லணை கால்வாய் சேருமிடத்தில் சாலை ஓரத்தில் நீண்ட நாட்களாக பெரிய பள்ளம் உள்ளது. இதனால் சிறு சிறு விபத்து நடந்த வண்ணம் உள்ளது. இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை