24 May 2023 11:54 AM GMT
#33182
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை வடக்கு வாசல் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை