12 March 2023 10:19 AM GMT
#28771
தரமற்ற புதிய தார்சாலை
வெண்டையம்பட்டி
தெரிவித்தவர்: Palvannan
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி, மனையேரிபட்டிக்கு செல்வதற்காக புதிதாக உய்யகுண்டான் கட்டளை வாய்க்கால் அருகே தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை போடப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருகின்றன. மேலும், சாலையும் ஆங்காங்கே உள்வாங்கி காணப்படுவதால் சாலை தரமற்று காணப்படுவதாக கூறுகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சாலையில் பயணம் செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை தரமான முறையில் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?