29 Sep 2022 3:56 PM GMT
#18101
மழைநீர் வடிகால் வசதி தேவை
ராஜகிரி
தெரிவித்தவர்: Rasith
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாலை ராஜகிரி பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் வருபவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?