2 Oct 2022 4:56 PM GMT
#18734
சமூக விரோதிகளின் கூடாரமான பூங்கா
திட்டக்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திட்டக்குடி அருகே ராமநத்தம் ஊராட்சியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இந்த பூங்கா தகுந்த பராமரிப்பின்றி இதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் பூங்காவிற்குள் புகுந்து மதுகுடிப்பது, சூதாடுவது உள்ளிட்ட குற்றச்செய்ல்களில் ஈடுபட்டு வருவதாேடு, மதுபாட்டில்களையும் அங்கேயே வீசி உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகின்றனர். எனவே பூங்காவை தருந்த முறையில் பராமரிப்பதோடு, சமூக விரோதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.