11 Aug 2024 5:11 PM GMT
#49022
தபால் அலுவலகம் பழைய இடத்துக்கு மாற்றப்படுமா?
கண்ணமங்கலம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் ஏ.ஜி.எம். தெருவில் பல ஆண்டுகளாக தபால் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய கட்டிடத்தில் தபால் நிலையம் செயல்படுவது பெரும்பாலான பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஏற்கனவே செயல்பட்ட பழைய இடத்துக்கே தபால் நிலையத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், கண்ணமங்கலம்.