வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குட்டையை முறையாக தூர்வார வேண்டும்
மராட்டிப்பாளையம், அணைக்கட்டு
தெரிவித்தவர்: லட்சுமணன்
அணைக்கட்டு தாலுகா மராட்டிப்பாளையம் கிராமத்தில் 60 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த 3 ஏக்கர் நீர்நிலை நாரப்பகுட்டை, மக்கள் போராட்டத்துக்கு பின் சென்ற நிதியாண்டில் ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு, தூர்வாரப்பட்டது. ஆனால் குட்டையை சீராக, சமமாக தூர்வாராமல், திட்டு திட்டாக தூர்வாரி உள்ளனர். அந்தக் குட்டைக்கு 4 பக்கமும் கரை போட்டு விட்டார்கள். கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் இருந்து தான் மழைநீர் குட்டைக்கு வரும். ஆனால், தற்போது கரைகள் அமைத்ததால் மழைநீர் வராத படி செய்து விட்டார்கள். குட்டையின் வடகிழக்கு மூலையில் வடிகால்வாய் உள்ளது. அது, தெற்கு நோக்கி போகிறது. அந்த வடிகால்வாயை சீரமைக்க வேண்டும். குட்டையை முறையாக தூர்வாரி, நீரை தேக்கி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லட்சுமணன், மராட்டிப்பாளையம்.





