25 Jan 2023 10:57 AM GMT
#25950
அணையை பராமரிக்க வேண்டும்
கலசபாக்கம்
தெரிவித்தவர்: Mr.Ramasamy
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா மேல்சோழங்குப்பத்தில் மிருகண்டா அணை 2010-ம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அணையை சுற்றி எந்த ஒரு பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. குறிப்பாக அடிப்படை வசதியான மின்சார வசதி இல்லை. அணை கட்டியபோது போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவும், அணையை பராமரிக்கவும் முன்வர வேண்டும்.
-அ.ஏழுமலை, கலசபாக்கம்.