9 March 2025 10:55 AM GMT
#54343
நாய்கள் தொல்லை
தஞ்சை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை சீனிவாசபுரம் விக்னேஸ்வராநகர்,லெட்சுமிநகர்,நாயுடுநகர் பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சாலையில் கூட்டமாக உலா வரும் நாய்களால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.