23 Jun 2024 12:30 PM GMT
#47725
கிணற்றில் மூடி இல்லை
கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலப்பொட்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக குடிநீர் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கிணற்றில் மூடி அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக குப்பைகள் கிணற்றில் விழுந்து குடிநீர் மாசுபட்டு வருகிறது. இதனால் அந்த நீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.