16 Jun 2024 12:38 PM GMT
#47510
அங்கன்வாடி மையம் திறக்கப்படுமா?
பாபநாசம்
தெரிவித்தவர்: தமிழன்பிரபு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கணபதி அக்ரஹாரம் பாலக்கரை பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த கட்டிட பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது. பழைய கட்டிடத்தில் வைத்து பொருட்கள் வழங்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.