2 Jun 2024 10:10 AM GMT
#47091
புதர்கள் அகற்றப்படுமா?
கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் இருந்து மண்வயல் செல்லும் சாலையில் அத்திப்பாளி முதல் நம்பாலக்கோட்டை வரை இருபுறமும் புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவை சாலை வரை நீண்டு உள்ளதால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும் வனவிலங்குகள் பதுங்கி இருந்தால் கூட தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோரும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அங்குள்ள புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.