26 May 2024 11:05 AM GMT
#46946
உழவர் சந்தை அமைக்கப்படுமா?
கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூரில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஆனால் அவர்கள் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்த போதிய வசதிகள் இல்லை. இதன் காரணமாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் பந்தலூரில் விளையாட்டு மைதானம் செல்லும் சாலையோரத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் காலியாக கிடக்கிறது. அந்த நிலத்தில் உழவர் சந்தை அமைத்து கொடுத்தால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். அதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.