19 May 2024 12:15 PM GMT
#46767
வடிகால் வசதி இல்லை
கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் பிரதான சாலையில் ராக்லேண்ட் தெரு பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகாலை முறையாக அமைக்கவில்லை. இதனால்தான் அந்த சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இனி வரும் நாட்கள் மழைக்காலம் என்பதால் உடனடியாக மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும்.