14 April 2024 5:10 PM GMT
#46002
ஆக்கிரமிப்பால் மாயமான விளையாட்டு மைதானம்
நகர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
பிரம்மதேசம் அருகே நகர் கிராமத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் விளையாடுவதற்காக தமிழக அரசின் சார்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அந்த மைதானத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தற்போது விளையாட்டு மைதானம் இருக்கும் இடம் தெரியாத வகையில் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் அந்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பால் மறைந்துபோன விளையாட்டு மைதானத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?