17 Dec 2023 5:33 PM GMT
#43039
பயனில்லாத கிணறு
ராஜபாளையம்
தெரிவித்தவர்: சங்கர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அசோக் நகரில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு நீண்ட காலமாக தரைமட்டமான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு திறந்தநிலையில் உள்ளதால் ஆடு, கோழிகள் போன்றவை கிணற்றுக்குள் விழுந்து இறக்கின்றன. இதனால் இங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அச்சப்படுகின்றனர். ஆதலால் விபத்துகள் எதுவும் நடக்கும் முன்பு பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கிணற்றினை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.