29 Oct 2023 10:11 AM GMT
#41716
அதிகரிக்கும் விபத்துகள்
கோத்தகிரி
தெரிவித்தவர்: ஆனந்த், கோத்தகிரி
கோத்தகிரி நகர் பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பேரூராட்சி எச்சரித்து உள்ளது. இருப்பினும், நகரின் முக்கிய சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.