5 March 2023 11:50 AM GMT
#28400
பால் பூத் வைக்கப்பட்ட அஸ்திவாரத்தால் இடையூறு
கண்ணமங்கலம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் புதிய சாலை பஸ் நிலையத்தில் தனிநபர் ஒருவர் ஆவின் பால் பூத் கடை வைக்க அஸ்திவாரம் போட்டு கட்டிடம் கட்டினார். பால் பூத் வைக்க சிலர் எதிர்ப்பு கிளம்பியதால் வைக்கவில்லை. கட்டிட அஸ்திவாரம் பாதியிலேயே மேடை போல உள்ளது. இதனால் இப்பகுதியில் பஸ்கள் திரும்ப முடியாமல் உள்ளது. இந்த மேடையை சுற்றி ஆட்டோக்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் நிற்க வேண்டிய பஸ்கள் சாலையில் நின்று செல்கின்றன. எனவே போக்குவரத்துக்கும், வாகனங்கள் சென்று வரவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே பாதியிலேயே நிறுத்தப்பட்ட சிமெண்டு கான்கிரீட் மேடையை அகற்றினால் பஸ்கள் சாலையில் நிற்பதை தவிர்க்கலாம். பாதியிலேயே நின்று போன ஆவின் பால் பூத் மேடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
-ராமகிருஷ்ணன், கண்ணமங்கலம்.