28 Sep 2022 10:43 AM GMT
#17745
பயன்பாட்டுக்கு வராத சுகாதார நிலையம்
பெரியகல்லப்பாடி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரியகல்லப்பாடி கிராமம். அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் அங்குள்ள கூட்டுறவு கடன் சங்கம் அருகில் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் கட்டிடம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவசர காலங்களில் சிகிச்சைக்காக திருவண்ணாமலை, காட்டாம்பூண்டி சுகாதார நிலைத்திருக்கும் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இதனால் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
-பொதுமக்கள், பெரியகல்லப்பாடி.