22 Sep 2022 10:43 AM GMT
#16484
சாலையில் சுற்றித் திரியும் மாடு
திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை நகரப் பகுதியில் தாலுகா அலுவலகம், சின்ன கடை வீதி, கடலைக்கடை சந்திப்பு பகுதி, தேரடி வீதி உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நிறைந்த பகுதிகளாகும். இந்த இடங்களில் கடந்த சில தினங்களாக சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவண்ணாமலை-போளூர் சாலையில் மாடு ஒன்று குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு மொபட்டில் சென்ற 2 பெண்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. எனவே இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருணாச்சலம், திருவண்ணாமலை.