31 July 2022 12:28 PM GMT
#5244
நவீன நூலகம் அமைக்கப்படுமா?
ஏரல்
தெரிவித்தவர்: வீரமுத்துராஜ்
ஏரல் ஊரைச் சுற்றி சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு வாசிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நவீன உயர்தர பொது நூலகம் ஒன்றை ஏரலில் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?