10 Sep 2023 12:45 PM GMT
#39601
பஸ் நிலைய வளாகத்தில் தேங்கும் மழைநீர்
தஞ்சை
தெரிவித்தவர்: Palvannan
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நகர பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே உள்ள பகுதி தாழ்வாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.