23 Aug 2023 1:24 PM GMT
#38557
நாய்கள் தொல்லை
தஞ்சை
தெரிவித்தவர்: Palvannan
தஞ்சை ராமநாதன் ரவுண்டானா பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை இரவு நேரங்களில 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி்க்கொள்கின்றனர். இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.