31 May 2023 9:00 AM GMT
#33555
வாறுகாலில் சோ்ந்த குப்பைகள்
விளாத்திகுளம்
தெரிவித்தவர்: ஜான்ரவி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கழிவு நீர் வாறுகாலில் கழிவுநீர் செல்ல இயலாதபடி பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுப்புறசூழல் பாதிக்கப்படுவதோடு துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.