1 March 2023 11:46 AM GMT
#28106
பழுதான நிழற்குடை
கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் பயணிகள் நிழற்கடை உள்ளது. இந்த நிழற்குடை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் மதுபாட்டில்கள், குப்பைகள் சிதறி கிடக்கிறது. இதன் காரணமாக நிழற்குடைக்குள் செல்லவே பயணிகள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக பெண் பயணிகள் அங்கு செல்வதே கிடையாது. இதனால் மழை, வெயிலில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.