21 Dec 2022 5:01 PM GMT
#24115
பள்ளி மேற்கூரை சேதம்
கோவிலூர்
தெரிவித்தவர்: சண்முகம்
குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து வருகிறது. மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் மேற்கூரை இடிந்து விழுந்து உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.