27 Sep 2022 2:35 PM GMT
#17639
கூடுதல் ஊழியர் நியமிக்க வேண்டும்
பசுவந்தனை
தெரிவித்தவர்: முத்துகணேஷ்
ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் முன்பு 2 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது ஒரு ஊழியர் மட்டுமே உள்ளதால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கூடுதல் ஊழியரை நியமிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.