21 Sep 2022 12:29 PM GMT
#16311
பயணிகள் அவதி
பொன்னன்குறிச்சி
தெரிவித்தவர்: மாரிமுத்து
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆதிச்சநல்லூர் ஊராட்சி பொன்னன்குறிச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு பஸ் நிலையத்தை இடித்து விட்டு புதிய பஸ்நிலையம் கட்டப்போவதாக கூறப்பட்டது. ஆனால், இன்னும் பஸ்நிலையம் அமையவில்லை. பஸ் ஏற வரும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் வெயிலிலும், மழையிலும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.