23 Aug 2022 3:16 PM GMT
#10265
செயல்படாத மின்கட்டண அலுவலகம்
உடன்குடி
தெரிவித்தவர்: மூர்த்தி
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலைய ரோட்டில் துணை மின்கட்டண அலுவலகம் செயல்பட்டு வந்தது. உடன்குடி மற்றும் சில பகுதி மக்கள் இந்த அலுவலகத்துக்கு வந்து மின்சார கட்டணத்தை செலுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த அலுவலகம் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் மின்கட்டணம் செலுத்த தேரியூருக்கு செல்கிறார்கள். எனவே இந்த மின்சார அலுவலகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.