22 Sep 2024 12:32 PM GMT
#49980
ஆபத்தான மின்கம்பம்
அகரம் கிராமம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அகரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலையின் அருகில் பயன்படுத்தப்படாத மின்கம்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும், கீழே விழுந்துவிடும் என்பது போல உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவு குழந்தைகள் இருப்பதாலும், வாகனங்கள் அதிக அளவு செல்வதாலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.