28 July 2024 5:28 PM GMT
#48635
எரியாத மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?
தர்மபுரி
தெரிவித்தவர்: Sivashanmugam
தர்மபுரி-பாலக்கோடு சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் இந்த மேம்பாலத்தில் 50 சதவீத பகுதி இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கியு உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் முழுமையாக எரியும் வகையில் உரிய சீரமைப்பு பணியை சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.