21 July 2024 6:32 PM GMT
#48525
எரியாத மின்விளக்கு
சேலம்-தெற்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் மரவனேரி கே.ஏ.எஸ். நகர் 4-வது தெருவில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக மின்கம்பம் அமைக்கப்பட்டது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு இதுவரை மின்விளக்கு எரியவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இரவு நேரத்தில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து எரியாத மின்விளக்கை சரி செய்து தர வேண்டும்.
-பாஸ்கர், சேலம்.