26 May 2024 5:49 PM GMT
#47057
எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி மெய்யனூர் கூட்டத்து புளியமரம்
தெரிவித்தவர்: SUDHAKAR SITHURAJU
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில் 13, 14-வது வார்டு அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மெய்யனூர் புளியமரம் அருகில் இருக்கும் உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த 2 மாதங்களாக இரவில் எரியவில்லை. இதனால் இந்த முக்கிய பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.