24 Dec 2023 5:20 PM GMT
#43215
மின்விளக்கு அமைக்க கோரிக்கை
தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கூட்ரோடு மையப்பகுதி ஆகும். சாமனூர், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி ஆகிய 3 ஊர்களுக்கு செல்லக்கூடிய இந்த பகுதி இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து மின்விளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிவம், சாமனூர்.