5 Nov 2023 11:41 AM GMT
#41967
புகார் பெட்டிக்கு நன்றி
ரிவேரா நகர்
தெரிவித்தவர்: வால்டர்
திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டி ரிவேரா நகரில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளில் ஒரு சில இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.